ஊதா நிற உருளைக்கிழங்கின் நன்மைகள்!

ஊதா நிற உருளைக்கிழங்கு நமக்கு இரு வழிகளில் உதவுகிறது. ஒன்று ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையைக் அதிகரிக்கச் செய்யாது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்ப்பதற்குத் சிறியதாகத் தோன்றினாலும், இது இதய நோயின் ஆபத்துகளைக் குறைக்கிறது. ஊதா நிற உருளைக்கிழங்கு ஆக்ஸிஜன் உட்பொருட்களைக் கொண்டுள்ளது.

மேலும் இது கொரியாவில், எடையைக் குறைக்கும் பிரபலமான நாட்டு மருந்தாக உள்ளது.அதிக ரத்த அழுத்தத்துடன் அதிக எடையைக் கொண்ட 18 பேரிடம் ஒரு நாளைக்கு இரு முறை 6-8 சிறிய மைக்ரோவேவ் அளவுடைய ஊதா உருளைக்கிழங்குகள் கொடுத்து சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனை 4 வாரங்களுக்கு நடைபெற்றது. சோதனை முடிவில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மேலும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை.