நீர்வளம் நிறைந்து காட்சி தரும் புங்குடுதீவு. வடகிழக்கு பருவ பெயர்ச்சிக் காற்றினால் ஏற்படும் மழைவீழ்ச்சியின் பிரதிபலிப்புக்களே இந்த நீர்வளம் ஆகும்.
கால்நடைகளுக்கும், இந்த மக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. வாழ்வாதார உதவியின்றி தவித்த மக்களுக்கு கால்நடை வளர்ப்பு ஒரு வரப்பிரசாதம்.
புங்குடுதீவு வாழ்.மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டத்தை பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும் இன்னமும் புங்குடுதீவு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகின்றது.
எனவே புங்குடுதீவு புலம்பெயர் வாழ்.மக்களே எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க உங்கள் மனங்கள் திறக்கட்டும் என புங்குடுதீவு வாழ்.மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.