இதற்கு இப்படியா..! இரட்டை மகிழ்ச்சியில் விஜய் சூர்யா படக்குழு

திரையுலகத்தினர் அனைவருக்கும் பெரும் தலையிடியாக இருந்து வருகிறது திருட்டு விசிடி வெப் சைட்கள். இந்த வெப் சைட்கள் பற்றி பலதடவைகள் முறைப்பாடுகள் பதிவு செய்திருந்தாலும் அதனை முற்றாக ஒழிக்க முடியவில்லை.

தற்போது வெளியாகி வெற்றிநடைபோட்ட ரஜினியின் கபாலி படத்தின் வெளியீட்டின் போது இந்த திருட்டு விசிடி வெப் சைட்களை தடை செய்ய வேண்டுமென ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நீங்க என்னதான் செய்தலும் நாங்க ஒளிபரப்புவோம் என்று மறைமுகமாக வேறு பெயர்களில் தொடங்கப்பட்டு புதிய படங்கள் அனுமதியில்லாமல் திருட்டு தனமாக வெளிடப்பட்டது. இதன் காரணமாகவே திரையுலகத்தினர் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

தற்போது முக்கிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் இந்த நிலைமை கிறிஸ்துமஸ், பொங்கல் நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள விஜய், சூர்யா படங்களுக்கு சவால் விடுமா என்ற அச்சம் இருந்த நிலையில், நேற்று திருட்டு விசிடி வெப்சைட் நிர்வாகிகள் கோயமுத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது திரையுலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பாக விஜய், சூர்யா படக்குழுவினரை.