மத்தியில் பா.ஜ.க அரசு பதவி ஏற்றதில் இருந்து தினம் ஒரு திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நவம்பர் 8ம் தேதியிலிருந்து கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக மோடி அவர்கள் பழைய ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசலிலும் வரிசையில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில் குஜராத்தில் கூட்டுறவு பால் நிலையத்தை திறப்பதற்காக அகமதாபாத்திற்கு மோடி வந்துள்ளார். திறப்பு விழாவில் தொண்டர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.
இதனால் குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே மோடிக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவருக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சிக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
எனவே மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு நிற பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.