சில நாட்களுக்கு முன்னர் கணவரை பிரியவுள்ளதாக பல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
இந்த வதந்திகள் ஒருபுறம் இருக்க அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மீண்டும் சினிமாவில் கால்பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றார் மீரா.
இருப்பினும் தற்போது என்ன பிரச்சினை எனில் மிகவும் செக்ஸியாக ஒருபோதும் நடிக்கமாட்டேன் என்றும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் மட்டும் தான் நடிப்பேன் எனவும் அவுத்து போட்டு ஆடுவதில் எனக்கு விருப்பம் இல்லை என கண்டிசன்களை போடுகிறாராம்.
இதன் காரணமாகவே அவரை தேடிவந்த இயக்குனர்கள் எல்லாம் திரும்பி சென்று விடுகின்றார்களாம். அது தொடர்பில் மீரா ஜாஸ்மின் பேட்டி ஒன்றில் கூறும்போது. சிலருக்கு பிரியாணி பிடிக்கும் சாப்பிடுகிறார்கள், ஆனால் எனக்கு கஞ்சியும் பயறும் தான் பிடித்திருக்கிறது அதற்காக என்னை பார்த்து அடடா உனக்கு பிரியாணி கிடைக்கவில்லையே என ஏன் வருத்தப்படுகிறீர்கள்.
படங்களில் நடிப்பதும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பம்” என முகத்தில் அடித்தவாறு கூறிவிட்டு சென்றுள்ளார் மீரா ஜாஸ்மின்.
நடிப்பதற்கு வந்த அனைத்து நடிகைகளும் இதைத்தான் கூறினார்கள். பொறுத்திருந்தால் தான் தெரியும்.