ஜெயலலிதாவால் விஜய் செய்த காரியம்… வெளிவந்த ரகசியம்!

விஜய்யின் பைரவா படம் பற்றிய ரகசியம் ஒன்று கசிந்துள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பைரவா படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் வருகிறாராம். ஒரு கதாபாத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவராம். மற்றொரு கதாபாத்திரம் நகரத்தை சேர்ந்தவராம்.

இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக விஜய் இரண்டு கெட்டப் போட்டுள்ளாராம். மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் விஜய்யே குரல் கொடுத்திருந்தாலும் அவை வித்தியாசமாக வந்துள்ளதாம்.

விழா பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதால் இசை வெளியீட்டு விழாவை சப்தமில்லாமல் நடத்த முடிவு செய்துள்ளார் விஜய்.

ஜெயலலிதா மீது வைத்துள்ள மரியாதையால் விஜய் இசை வெளியீட்டு விழா குறித்து இப்படி முடிவு எடுத்துள்ளாராம். அவர் பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.