காலாணி என்பது சிறு பிள்ளை முதல் பெரிய வயதினர் வரை அனைவருக்கும் தோன்றும் ஒரு நோய். இது பாதத்தில் உள்ள பிரச்சினையாகும்.
பாதத்தில் வேண்டாத வகையில் சிறிய கொப்புளம் போல் தோன்றி பின் 5 ரூபாய் துட்டு அளவுக்கு பெரிதான தசை வளர்ந்துவிடும். இந்த தசையானது வளர்ந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு நம்மை மாற்றிவிடும்.
பின் பிளேடைக்கொண்டு அறுத்து எடுப்பர். இது எதனால் தோன்றுகின்றது. இது ஒரு தொற்று நோய், காலாணி வந்தவர்களின் செருப்பை அணிந்தால் கூட நமக்கும் இந்த காலாணி வந்துவிடும். வெறும் காலோடு நடந்தால், கழிவறையில் வெறும் காலோடு அமர்தல், சாக்கடைக் கழிவுகளில் காலை வைத்து நடந்தால் இந்த காலாணி வந்துவிடும்.
காலாணி வராமல் இருக்க தினமும் வெளியே சென்று வரும் போதும், கழிவறையில் நுழைந்து வரும் போதும் காலை நன்றாக பாதமுதல் தேய்த்து கழுவவேண்டும். செருப்பை முடிந்த வரை இரவல் தராதீர்கள். அப்படி இரவல் தந்தால் மீண்டும் அணியும் முன்பு சுத்தமாக கழுவிவிடுங்கள்.
அப்படியும் காலாணி வந்து விட்டது என்றால் கவலைப்படாமல் கீழ்க்கண்டவற்றை தேர்ந்தெடுத்து செய்து பாருங்கள் சரியாகிவிடும்.
- வீட்டு வைத்தியமாக இதை செய்து பாருங்கள். நல்ல பெரிய பல் பூண்டை நசுக்கி லேசான சூட்டில் காட்டி காலாணியில் ஒரு துணியை வைத்து காலில் இறுக்கி கட்டிவிடவும். இது போல் தினமும் செய்து வாருங்கள், காலாணி மறைந்து போய்விடும்.
- அம்மான் பச்சரிசி தாவரத்தை கிள்ளும் போது பால் வரும். அந்தப்பாலை காலில் காலாணியில் தடவவேண்டும். இதனால் காலாணி பட்டுவிடும்.
- வெங்காயத்தைக் கூட காலாணியில் தேய்க்கும் போது காலாணி பட்டுவிடும்.
- இஞ்சியை நசுக்கி சாறு எடுத்து அதில் சிறிது வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை அதில் சிறிது கலந்து கலக்கி காலாணியில் தடவ வேண்டும். தூங்குவதற்கு முன்னர் கூட இதை தடவி விடலாம்.
- மஞ்சள் ஒரு கிருமி நாசினி, காலாணியை நன்றாக கழுவிவிட்டு அதன் மேல் மஞ்சளை பூசிவிட்டு வந்தால் சீக்கிரத்தில் காலாணி பட்டுவிடும்.