யாழ்.கோப்பாயில் 6 இளைஞர்கள் கைது

யாழ்.கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சா புகைத்த படி 6 இளைஞர்களை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் கு றிப்பிடுகையில்,

கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு வீதியால் செல்லும் மக்களுடனும், வேறு பகுதிகளுக்கு சென்று மோதல்களிலும் ஈடுபடும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்றைய தினம் அதிகாலை பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பின்போது கஞ்சா புகைத்தபடி இருந்த 6 இளைஞர்களை கைது செய்திருக்கிறோம்.

அவர்களிடம் நடத்தப்பட்ட உடனடி விசாரணைகளில் 3 பேரிடம் வாள்கள் உள்ளமை கண்டறியப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளது.

மேலு ம் ஒரு மோட்டார் சைக்கிளும் மீட்கப் பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுள் வாள்களை வைத்திருந்த மூவரையும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவானது உத்தியோகபூர்வ வாசஸ் ஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல மேலும் தெரிவித்தார்.