ஜெயலலிதா உடல்நிலை வைத்தியம் பார்க்க வந்தவர் பிரபல லண்டன் டாக்டர் இல்லை? வெளியாகிய அதிர்ச்சி தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேலே தலைமையில் சிகிச்சை நடைபெற்று வருவதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கடந்த 5ம் தேதி அறிவித்தனர். இதிலும் முன்னுக்குபின் முரணான அறிவிப்புக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கத்திற்கு பிறகு அவரின் இறப்பு குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ஏராளமாக பரவி வருகிறது.

இதனால் தமிழக மக்களும், அதிமுகவினரிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுப்பதற்கான சலசலப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேலே குறித்து வாட்ஸ்அப்பில் அதிர்ச்சி தகவல் வைரலாக பரவி வருகிறது. அந்த தகவலில், ‘‘பிரபல டாக்டர் என்ற போர்வையில் வந்தவர் யார்? விசாரணையில் கிடைத்த உண்மை.

ரிச்சர்டு பீலே இங்கிலாந்தில் மீன் மற்றும் இறைச்சி பதனிடும் தொழிற்சாலை நடத்துபவர்.

ஒரு வருடம் வரை மீன், இறைச்சியை துளியும் கெடாமல் பாதுகாப்பதில் வல்லவராம். இங்கிலாந்து இளவரசி டயானா இறந்த போது அவரது உடலை ஒரு மாதம் கெடாமல் இருக்க இம்பாபிம் செய்தவர் இந்த ரிச்சர்டு பீலே’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஜெயலலிதா மறைவில் பல சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்த வாட்ஸ் அப் தகவலும் சேர்ந்து தமிழக மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.