ஜெயலலிதாவின் இரகசியங்கள் ஒரு கருவியில் இருக்கிறதா? – இது என்ன புதுக்கதை!?

முதல்வர் ஜெயலலிதா எப்போதும் கையில் ஒரு கருவியை வைத்திருப்பார். அவர் விரும்பிக் கேட்கும் பாடல்களை அந்தக் கருவியில் வைத்திருப்பதாக மற்றவர்களிடம் கூறுவதுண்டு.

ஆனால், அந்தக் கருவியில்தான் சில முக்கியமான இரகசியங்களை வைத்திருந்தாரோ? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

உடல்நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படு முன், தன்னுடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர்களுக்குத் தெரியாமலே சில இரகசிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

அந்த வகையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அ.தி.மு.கழக அசையா சொத்துக்களை அவரது மறைவுக்குப் பின் யார் நிர்வகிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களையெல்லாம் அதில் பதிந்து வைத்திருக்கிறாராம்.

சில முக்கியமான ஆவணங்கள் தனக்கு விசுவாசமான எவரிடம் இருக்கிறது என்பது போன்ற தகவல்களும் அதில் அடக்கமாம்.

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் அந்தப் பிரமுகர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான சிலருக்குக் கூட தகவல்கள் தெரியாதாம்.

சினிமா பாடல்களை ஒரு பகுதியில் கொண்ட அந்தக் கருவியின் பாஸ்வேர்ட் (Password) பாதுகாக்கப்பட்ட பகுதியில் இது போன்ற தகவல்கள் இருக்கிறது என்கிறார்கள்.

அந்தக் கருவியை மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு பணிப்பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்தாராம் ஜெயலலிதா.

அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பிய சமயத்தில் அவர் விசாரித்தது அந்தக் கருவியைத்தான்.

அதைத் தேடும் போதுதான், அதை வைத்திருந்த பணிப்பெண்ணைக் காணவில்லை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அவர் எங்கே போனார் என்று தெரியாமல் குழம்பி தமிழகத்தின் சில ஊர்களிலும், குமரி மாவட்டத்தை ஒட்டிய கேரள எல்லைகளில் சில பகுதிகளிலும் சர்வே எனச் சொல்லி தேடுதல் நடத்தியிருக்கிறார்களாம் சென்னையைச் சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள்.

அட… என்னங்க இது… ஏதோ இங்கிலீஷ் படக் கதை மாதிரி இருக்கே… நம்பலாமா?’ என்ற சந்தேகத்துடன் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரிடம் வினவிய போது,

இதெல்லாம் வடி கட்டின பொய். அந்த மாதிரி எந்த தகவலோ, உயிலோ இல்லை. பணிப்பெண் காணாமல் போயிட்டாங்கனு சொல்றதுலாம் கற்பனையின் உச்சம்.

சசிகலாவின் எதிர் கோஷ்டியினர் இப்படியெலாம் ஏதாவது வதந்தி கிளப்பி விடத்தான் செய்வார்கள்.

அதையெல்லாம் ‘அம்மா’ வழியில் சசிகலா எப்படியும் முறியடிப்பார் என்கிறார்கள்.

இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, உண்மையா என்னனு யார் சொல்றது!?