முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ட்ரம்ப், ஹிலாரி மோதல்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட போது ட்ரம்ப்பை விட ஹிலாரிக்கே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கனவுகளை பொய்யாக்கி ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறினார். அதன் பின்பு மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. குறிப்பாக அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை அமெரிக்காவின் பென்சில்வேனியா உள்ளிட்ட, சில மாகாணங்களில், அவர் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அங்கு, முறைகேடு நடந்ததாகக் கூறி, மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதை ஏற்று, விஸ்கான்சின் மாகாணத்தில், மறு வாக்களிப்பு எண்ணிக்கை நடந்தது. இதில் டரம்பே வெற்றி பெற்றுள்ளார். அங்கு, ஹிலாரியை விட, கூடுதலாக, 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ட்ரம்ப் வென்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எவ்வித தடைகளும் இன்றி ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். எனவே, நீண்டகாலமாக தொடர்ந்துக் கொண்டிருந்த ட்ரம்ப், ஹிலாரி மோதல் ஒருவகையாக முடிவு கண்டுள்ளது.