அனுபவம் மிகுந்த இயக்குனராக தனுஷ் செயல்படுகிறார்: சாயாசிங்

‘திருடா திருடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் சாயாசிங். அந்த படத்தில் வரும் ‘மன்மதராசா…’ பாடலில் இருவரும் ஆடிய நடனம் எளிதில் மறக்கக்கூடியது அல்ல. இந்த படத்தை இயக்கியவர் சுப்பிரமணியன் சிவா.

தனுஷ் இப்போது டைரக்டராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாயாசிங்குக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சாயாசிங் கூறுமபோது, ‘திருடா திருடி’ படத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் சிவா தான் என்னை ‘பவர் பாண்டி’ படத்துக்கு பரிந்துரை செய்தார். ஒரு கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதிய தனுஷ் என்னை ஒப்பந்தம் செய்தார்.

ஒரு நடிகர் இயக்குனர் ஆனால் அவருக்கு நடிகர்-நடிகைகளிடம் இருப்பது எப்படி நடிப்பை வெளிப்படுத்த வைப்பது என்று தெரியும். தனுசுக்கு இது மிகவும் பொருந்தும். அவர் முதல் படம் இயக்குவது போலவே இல்லை. அனுபவம் வாய்ந்த இயக்குனர் போன்று செயல்படுகிறார். குழந்தை மாதிரி உற்சாகமாக இருக்கிறார்” என்றார்.

தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் நடித்துள்ள ‘பவர்பாண்டி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இயக்குனர் கவுதம்மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘பவர் பாண்டி’ படத்தை ஏப்ரல் 14-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.