இன்றைய ராசி பலன் 14-12-2016 | Raasi Palan

 

  • மேஷம்

    மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு  உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: காலை 9.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம்  விலகும்.  பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள்.  குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன்  ஆதாயம் தரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல்  செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன்  பெருகும் நாள்.

  • கன்னி

    கன்னி: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.  மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.  சாதிக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: காலை 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.  கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண்  பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.  தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும்  நாள்.

  • மகரம்

    மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில்  தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

  • மகரம்

    மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில்  தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

  • கும்பம்

    கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக  செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.