முதல்வர் ஜெயலலிதா தனது குடும்பம் பற்றியதான தகவல்களை வெளிப்படுத்த விரும்பாதவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கூட சசிகலாவை மாத்திரமே தனக்கு உதவியாக வைத்துக் கொண்டார். முதல்வரின் இறுதிச் சடங்கைக் கூட தோழி சசிகலாதான் செய்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் குடும்பம் தொடர்பான முக்கியமான விடயம் ஒன்று வெளியாகியுளளது.
அவருக்கு தங்கை ஒருவர் இருப்பதாகவும், தங்கைக்கு அம்ருதா என்ற பெண் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.ஆனால் இவ்வாறு தனக்கு தங்கையொருவரும் மகளும் இருப்பதாக ஜெயலலிதா வெளிப்படுத்தவே இல்லை.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் பேத்தி தான் இந்த அம்ருதா. இவர் தற்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் இரத்த உறவான அம்ருதா தற்போது கர்நாடகாவில் வசிக்கிறார்.. அங்குள்ள ஊடகங்கள் ஜெயலலிதாவின் குடும்பத்தினரை சந்தித்து பேட்டி எடுத்து வருகின்றன. ஜெயலலிதா எப்பொழுதுமே தனது குடும்பம் பற்றிய தகவலை கூறுவதற்கு விருப்பம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.