ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பது இன்னும் நம்ப முடியவில்லை. இது பலதரப்பட்ட மக்களின் கருத்தாக இருக்கிறது. தமிழக அரசியலில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது இவரது இழப்பு. ஒன்றை இழக்காமல் ஒன்றை அடைய முடியாது என்பார்கள்.
இது ஜெயலலிதா அவர்களது வாழ்க்கைக்கும் பொருந்தும்.சிறு வயதிலிருந்தே தனது தந்தையின் மறைவில் இருந்து கனவு, ஆசைகள் என பலவற்றை இழந்துள்ளார் ஜெயலலிதா
படிப்பில் கெட்டி: ஜெயலலிதா படிப்பில் டாப்பராக இருந்தவர். இவரை திரை துறையில் இவரது குடும்பம் பொருளாதார நிலைப்பாட்டை காரணம் காட்டி நுழைத்து. இவரது தாய் சந்தியா இவரை நடிக்க வற்புறுத்தினார் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
திறன்மிக்க நடிகை: தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. எந்த விதமான பாத்திரமாக இருப்பினும், எவ்வகையான படமாக இருப்பினும் அதற்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்தும் நடிகையாக திகழ்ந்தார்.
சில்வர் ஜூப்ளி: அதிக சில்வர் ஜூப்ளி படங்களில் நடித்த தமிழ் நடிகை என்ற புகழ் ஜெயலலிதா அவர்களையே சேரும். அவர் நடித்த 85 படங்களில் 80 படங்கள் சிலவர் ஜூப்ளி. இவர் நடித்த ஒரே ஒரு இந்திபடமும் ஹிட் படம்.
குயின்: இவர் முறையாக பல வகை நடனங்கள் கற்றவர். திரையில் இவரை போல நடனம் ஆடுவது கடினம் என்றும் கூற பலர் கூறுவார். தனது நடன திறமையால் தமிழ் சினிமாவின் ராணி என்ற பட்டம் பெற்றார்.
பாடகி! இவர் இவரது படங்களுக்காக பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில படம்: Epistle எனும் ஆங்கில படத்தில் ஜெயலலிதா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தை முன்னாள் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களின் மகன் சங்கர் கிரி என்பவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியகாந்தி: ஆணுக்கு நிகரானவள் பெண் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலான கதையம்சம் கொண்ட சூரியகாந்தி என்ற படத்தில் முத்துராமன் உடன் ஜெயலலிதா அவர்கள் நடித்தார். இது அவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்த படமாகும்.