சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 திரைப்படம் டிசம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கியுள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
மேலும் இப்படம் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதால் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவுள்ளது. இந்நிலையில் நேற்று சிங்கம் 3 படத்தை வெளிநாட்டு பிரிட்டிஷ் தணிக்கை குழு அதிகளவில் கோரமான காட்சிகள் உள்ளதால் படத்துக்கு 15 ரேட்டிங் கொடுத்துள்ளது.
இந்த ரேட்டிங் கை பொறுத்த வரை குழந்தைகள் பார்க்கக்கூடிய படம் இல்லை என்பதை குறிக்கும். இதனால் மீண்டும் ஐங்கரன் நிறுவனம் படத்தை மறுதணிக்கைக்குழுவுக்கு எடுத்துச்செல்லவுள்ளதாம்.