கடமைக்கு வராதவர்கள் சுயமாக விலகிக் கொண்டவர்கள்!

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் தங்களை தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினர் நாளை (15) ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்காது போனால், அவர்கள் கடமையிலிருந்து தானாக விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நீங்கிச் சென்றவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் தொழிலில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் போது, அங்கு வேலை செய்த சகலரினதும் தொழில் பாதுகாப்பு ஏற்பாட்டுடனும், சம்பள அதிகரிப்புடனும்,சீன நிறுவனத்தின் கீழ் தொழில் செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.