துலாம் ராசிக்காரர்களுக்கு உயிராபத்தா? ஜனாதிபதி மைத்திரிக்கு ஆபத்தா? இந்திய ஜோதிடரின் சவால்

அடுத்தாண்டு ஏற்படும் கிரக மாற்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து இருப்பதாக ஜோதிடர் ஆரூடம் வெளியிட்டிருந்தார்.

இலங்கையின் ஜோதிடரான விஜத ரோஹன விஜேமுனி இந்த ஆரூடத்தை வெளியிட்டிருந்தார். அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் ஆரூடம் வெளியிட்டிருந்தமையால், அந்த வெற்றியின் பின்னர் உள்ளுர் ஊடகங்கள் அவரை புகழ்ந்து செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் இவரது ஆரூடம் தொடர்பில் இந்தியாவில் பயிற்சி பெற்ற பிரபல சோதிடர் சரச்சந்திர செவ்வி ஒன்று வழங்கியிருந்தார்.

அவர் இலங்கை ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் சரியான முறையில் ஆரூடம் கூறிய சோதிடராகும்,

ஜனாதிபதி மைத்திரியின் எதிர்காலம் தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,

விஜித ரோஹன ஆரூடம் சிலவற்றை வெளியிட்டிருந்தார். அவர் கூறுவதனை போன்று துலாம் ராசிக்காரர்களுக்கு ஆபத்து என்றால் உலகத்தில் உள்ள அனைத்து துலாம் ராசிக்காரர்களும் உயிரிழிக்க நேரிடும்.

அவர் கூறுவது முற்றிலும் பொய். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக செயற்படுவார். அவருக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. சாதாரண சுகயீனங்கள் ஏற்படுவது உட்பட அரிதான விடயமாகும்.

மாடு வெட்டுவதனை நிறுத்தினால் ஜனாதிபதியின் உயிர் காப்பாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சென்று மாடு வெட்டுமாறு கூறவில்லை. அவர் சில இலாபங்களுக்காக இந்த ஆரூடத்தை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. விஜித ரோஹன கூறுவதனை போன்று ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நான் எனது ஜோதிட தொழில் பொய் என தொழிலை விட்டு விடுகிறேன்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என அவர் கூறிய சோதிடம் உண்மையாகியதாக கூறினார். டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்பது பொதுவாக எல்லாராலும் கூற முடிந்த ஒரு விடயமாகவே காணப்பட்டது.

ஜனாதிபதி தனது ஆட்சி காலத்தில் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் செயற்படுவார் என்பது உறுதி. நான் அவர் ஜாதகத்தை ஆராய்ந்தவன் என்றதன் அடிப்படையில் இதனை கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.