ஜெயலலிதாவின் சமாதியில் கேட்கும் அழுகுரல்?

இவ்வளவு பெரிய புயலிலும் அசையாத ஜெயலலிதா சமாதி மேற்கூரை! மணல் மூட்டை போட்டு வெள்ளம் புகாமல் தடுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குள் தண்ணீர் புகுந்துவிடாமல் தடுக்க அதிகாரிகள் படாதபாடு பட்டனர்..!

ஆனால், அதற்கு வேலையே இல்லை. சொட்டு தண்ணீர் கூட சமாதிக்குள் போகவே இல்லை என்கிறார்கள்..!

அடித்த புயலின் வேகத்திற்கு அம்மா சமாதி கொஞ்சம் கூட ஆடாமல் அசையாமல் நின்றது. அதாவது அம்மா போலவே கம்பீரமாக நின்றது.

காவலர்களுக்கு நனையாமல் சமாதி பாதுகாப்பு கொடுத்தது. சாகும் வரை காவல் துறைக்கு குடை போல இருந்த அம்மா, இறந்த பின்னும் தஞ்சம் கொடுத்தார்.

இது இப்படி இருக்க நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் முகநூல் பக்கங்களில் ஒரு விசயம் தீயாகப் பரவியது.

அதாவது அம்மா சமாதியில் இரவு முழுவதும் அழுகுரல் சத்தமும்..வேதனையில் முணகல் சத்தமும் கேட்கிறது. கொஞ்சம் உற்றுக் கேட்டால் பகலிலும் அந்த அழுகுரல் கேட்கிறது என்கிற செய்தி தான் அது.!

இது எந்த அளவில் உண்மை என்று அறிய, அங்கு தினமும் தவறாமல் சென்று வணங்கி வரும் சிலரிடம் வினவிய போது, அப்படியா என்று ஆச்சரியமானார்கள்.

பின் அவர்களும் காது  கொடுத்து கேட்டார்கள். அது வேறொன்றுமில்லை, அருகில் கடற்கரை இருப்பதால், அலையில் எழும் அந்த காற்றின் சத்தம் அப்படி ஒரு பிரமையை நமக்கு உண்டாக்குகிறது.

மற்றபடி அம்மா அழும் டைப் அல்ல.. வீரப் பெண், இரும்புப் பெண்மணி..! என்றார்கள்..!