நாட்டில் தொழில் உண்டு ஆனால் தகுதியானவர்களே இல்லை!

தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே  இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஹிக்கடுவ, சீனிகம ஸ்ரீ ஜனரதன தொழில் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்விலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த  நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

பரம்பரை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஞானீஸ்ஸர தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த பயிற்சி நிலையம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.