இறந்து 55 நாட்கள் ஆன தாய்க்கு பிறந்த குழந்தை: மருத்துவர்கள் சாதனை

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையிலேயே 55 நாட்கள் வைத்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை உயிரோடு எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ள ஆச்சர்ய விடயம் அரங்கேறியுள்ளது.

போலாந்து நாட்டை சேர்ந்த 41 வயதான பெண் கர்ப்பமாக இருந்தார். அதே சமயத்தில் Brain Tumor நோயும் அவருக்கு இருந்துள்ளது.

நோய் முற்றியதால் கடந்த நவம்பர் மாதம் 17 வார கர்ப்பத்துடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அவரை எப்படியும் காப்பாற்ற முடியாது என தீர்மானித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் உள்ள குழந்தையையாவது காப்பாற்ற முடிவு செய்தனர்.

பின்னர் அவர் இறந்து விட குறைந்தபட்சம் 25 வாரங்களாவது அவர் உடல் அழுகாமல் இருக்க மருத்துவர்கள் போராடினார்கள்.

பின்னர் பல்வேறு மருத்துவ யுக்திகளை கையாண்ட மருத்துவர்கள் சரியாக அந்த பெண் இறந்து 55 நாட்கள் ஆன பின் சிசேரியன் மூலமாக அவர் வயிற்றில் இருந்த குழந்தையைஉயிருடன் எடுத்தனர்.

பிறக்கும் போது 1 கிலோ எடை மட்டுமே இருந்த குழந்தை பின்னர் ஐசியூ வார்டில் பல மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் 3 கிலோ எடையாக தற்போது உள்ளது.

குழந்தைக்கு Wojtek என பெயர் வைத்துள்ள அவர் தந்தை குழந்தையை பத்திரமாக பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.