உடல் எடையை குறைக்க பீன்ஸ் போதுமே

காய்கறி வகையைச் சேர்ந்த பீன்ஸில் நார்ச்சத்து, விட்டமின் A, B12, B6, C, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே நார்ச்சத்துகளை அதிகமாக கொண்டுள்ள பீன்ஸ் காய்கறியை தங்களின் உடல் எடையை சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அன்றாட உணவில் நாம் அடிக்கடி பீன்ஸ் காய்கறியை சேர்த்துக் கொள்வதால், நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பீன்ஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

நாம் தினமும் பீன்ஸ் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சினைகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சினைகளை தடுக்கிறது. இதனால் கழிவுகள் முறையாக வெளியேற்றப்பட்டு, நமது உடல் எடையும் குறைக்கிறது.

பீன்ஸில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகமாகவும், கலோரிகள் மிகவும் குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம் நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கிறது.

பீன்ஸ் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் நமது உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையை விரைவில் குறைக்க பயன்படுகிறது.

நமது உணவில், எலும்பில்லாத சிக்கன் துண்டு மற்றும் 1 கப் வேக வைத்த பீன்ஸ் போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு அசைவ உணவுகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள், நமது உடம்பின் ரத்தத்தில் இருக்கும் இன்சுலின் அளவை சீராக்குகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது.