12 ராசிக்காரர்களின் பலம் மற்றும் பலவீனம்: வாங்க தெரிஞ்சுக்கலாம்.

மேஷம் :

மேஷ ராசிக்காரர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பது அவனது அல்லது அவளது குணமாக இருக்காது. முதலில் இருந்தே அனைத்தையும் பொறுப்பில் எடுத்து, தலைமை வகிக்க விரும்புவார்கள். இந்த அணுகுமுறை அவர்களை தைரியமுள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும். அதனால் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. புதுமை விரும்பியாக இருக்க விரும்பும் இவர்கள், அவர்கள் செய்யும் எதிலும் முதல் ஆளாக இருக்கவும் விரும்புவார்கள். நம்பிக்கை மிகுந்த குணம் உடையவர்கள் இவர்கள்.

ரிஷபம் :

அடக்கமானவர்களான ரிஷப ராசிக்காரர்கள் நம்பகத்தன்மையுள்ளவராக, திடமானவர்களாக, பொறுப்புடையவர்களாக, கடின உழைப்பாளியாக, உறுதியுள்ளவராக, பொறுமைசாலியாக மற்றும் உயர்ப்பண்புடையவராக இருப்பார்கள். காளையால் உருவமைப்படுத்தப்பட்டுள்ள ரிஷப ராசிக்கார்கள் அருமையான நண்பர்கள், காதலர்கள் மற்றும் உடல் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டிருப்பார்கள். ஆழமாக காலூன்றியவர்கள் என்பதால் இவர்கள் வாழ்க்கையை நடைமுறைக்குரிய யதார்த்தத்துடன் பார்ப்பார்கள். சிறந்த அறிவுரைகளை வழங்கும் இவர்கள் மற்றவர்கள் கூறுவதை எப்போதும் பொறுமையாக கேட்பார்கள். அதேப்போல் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு வந்து நிற்பார்கள். மற்றவர்களை எப்போதும் கைவிட மாட்டார்கள்.

மிதுனம் :

ராசிகளுக்கு மத்தியில் தூதராக செயல்படுவது மிதுன ராசி. அந்த குணத்திற்கு ஏற்ப தொடர்பாற்றல் என்றால் இவர்கள் மிகவும் விரும்புவார்கள். வார்த்தைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கென ஒரு வழி இருக்கும். அதேப்போல் முக்கியமான விஷயங்களை எப்போதும் பெறுவார்கள். கூடுதலாக, நகைச்சுவை உணர்வுடன், ஆற்றல் திறன் மிக்கவராக, வாழ்க்கையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பார்கள். அதேப்போல் பெற்ற அறிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். புதிய ஆட்களை சந்திக்க அவர்கள் விரும்புவதால், இணங்கத்தக்க வகையில் இருப்பார்கள் அவர்கள். அனைவருடன் சுலபமாக பழகவும் செய்வார்கள்.

கடகம் :

கடக ராசிக்காரர்கள் தங்கள் மனதை கொண்டு யோசிப்பார்கள். அதனால் அவர்கள் விசுவாசமுள்ளவர்களாக, பாதுகாப்பளிப்பவர்களாக, அக்கறையுள்ளவர்களாக, வரவேற்கும் பண்புடையவர்களாக மற்றும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்கள் பக்கம் கடக ராசி நண்பர் பக்கபலமாக இருந்தால், நீங்கள் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. நீங்கள் சொகுசுடன் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். இயற்கையாகவே ஊட்டமளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் கையில் எடுக்கும் எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் கடின உழைப்பையும், முயற்சியையும் போடுவார்கள். மேலும் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதில் இருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள்.

சிம்மம் :

காட்டின் ராஜாவான இவர்கள் மனதளவில் மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால் நம்பிக்கை, லட்சியம், நற்பண்பு, விசுவாசம் மற்றும் ஊக்குவிக்கும் பண்பு என சிலவற்றை சொல்லலாம். தங்கள் நண்பர்களுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை காப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் காரியத்தை சிறப்பாக செய்ய அனைவரையும் ஊக்கப்படுத்துவார்கள். ஆதரவளிக்கும் குணத்தை கொண்ட இவர்கள் இயற்கையாகவே புதிரானவர்கள்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்கள் முடிவெடுக்க முடியாதவர்கள் என்பதால் பல நேரங்களில் அவர்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றனர். ஆனால் பிரகாசமான பக்கத்தை பார்க்கும் போது, குறிப்பிட்ட சில விஷயத்தைப் பற்றி அவர்கள் சமாதானமாகாத உண்மையை வெளிக்காட்டுகிறது. பகுப்பாய்வுடன் இருக்கும் இவர்கள், ஒரு விஷயத்தின் ஆணி வேர் வரை செல்வார்கள். அவர்களின் கூர்நோக்குகள் மிக ஆழமாக இருப்பதால், அவர்கள் எப்போதுமே நம்பகமான தகவலையே அளிப்பார்கள்.

துலாம் :

அமைதியை விரும்பும் துலாம் ராசிக்காரர்கள், அனைவரும் சௌகரியமாக, நன்றாக ஒத்துப்போகிறார்களாக என்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள். அனைவரும் ஒன்றாக மகிழ்ந்திட வேண்டும் என விரும்பும் இவர்கள், அதற்காக உபசரணையுள்ள சூழ்நிலையை உருவாக்குவார்கள். இயற்கையாகவே இராஜதந்திரத்துடன் இருக்கும் இவர்கள், எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி, சுலபமாக ஒன்றி, நண்பர்களைப் பெற்று விடுவார்கள். உயர்ந்த கொள்கைகள், வாழ்க்கையில் லேசான விஷயங்களுக்கு கூட சிறந்த சுவையைக் கொண்டிருக்கும் இவர்கள் வசீகரமானவர்கள். அனைவரையும் கனிவுடன் வரவேற்பார்கள். கனிவுடன் நற்பண்புகளை கொண்டவர்கள் இவர்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் கூர்ந்து நோக்கக்கூடியவர்கள். மேலும் ஒருவரைப் புகழ்ந்து, மோசம் செய்து தகவலை பெறக்கூடிய வல்லமையை கொண்டவர்கள். ஆழமான உள்ளுணர்வுடன், எந்த ஒரு விளக்கமும் இன்றி, ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனையை அவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள். சமயோஜித புத்தியுள்ள இவர்கள் தங்கள் வேலையை எப்படியும் வாங்கி விடுவார்கள். கூர்ந்து கவனிப்பதால் அடுத்தவர்களை சரியாக மதிப்பிடுவார்கள். விசுவாசமான நண்பர்கள் மற்றும் சிறந்த காதலர்களை இவர்கள் பெறுவார்கள்.

தனுசு

மிகுந்த நம்பிக்கை மிகுந்தவர்களான தனுசு ராசிக்காரர்கள், எப்போதுமே புதிய துணிகரமான செயல்களைத் தேடி செல்வார்கள். தங்களின் சுதந்திரம் மற்றும் சார்பற்ற தன்மையை அவர்கள் மதிப்பார்கள். அதேப்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இடம் தேவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களின் நம்பிக்கை குணம், புதிய அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடச் செய்யும். இவர்களின் படைப்பாற்றல் பக்கம் தொற்று தன்மை மிக்கவை.

மகரம் :

கடின உழைப்பாளியான மகர ராசிக்காரர்கள், தங்களின் வேலை மண்டலத்தில் வைராக்கியம் மிக்கவர்களாகவும், தலைமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் செய்வதை திறம்பட செய்யும் அவர்கள், தோல்விகளுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள பயப்பட மாட்டார்கள். ஒரு பிரச்சனைக்கு பொறுப்பெடுத்து அதனை தீர்க்க முற்படுவார்கள். விடை கிடைக்கும் வரை இவர்களுக்கு ஓய்வு கிடையாது. இலட்சியவாதிகளாக இருந்தாலும் கூட பொறுமைசாலிகள் இவர்கள். தொழில் ரீதியான மைல்கற்களை தொழில் ரீதியான வழியிலேயே அடைவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், இயற்கையாகவே சமயோஜித மற்றும் நடைமுறை புத்தியுள்ளவர்கள்.

கும்பம் :

பல்வேறு விஷயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு மகிழ்வதை விரும்புவார்கள் கும்ப ராசிக்காரர்கள். நீங்கள் ஏதேனும் புதிதாக பரிந்துரைத்தால், அதனை உடனடியாக எடுத்துக் கொள்வார்கள். நகைச்சுவை உணர்வு மற்றும் தகவமைப்பு பண்புடையவர்கள் இவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை இவர்கள் வெறுப்பார்கள். அதை தான் இவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமும் எதிர்ப்பார்ப்பார்கள். வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகும் இவர்கள் இம்மைக்குரிய விஷயங்களை புதுமையுடன் அணுகுவார்கள்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் அதிக உணர்சியுடையவர்கள். தங்களைச் சுற்றியுள்ள சந்தோஷம் மற்றும் சோகத்தை வைத்தே அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளை அனுதாபத்தோடு பார்ப்பார்கள். இவர்களின் நண்பர்கள் சோகமாக இருந்தால், இவர்களும் சோகமாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இரக்க குணமுள்ளவர்கள் இவர்கள். தாங்கள் விரும்பும் காரணம் மற்றும் நபர்களுக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவர்களின் கற்பனை உயர பறக்கும். அதனால் புத்திசாலித்தனமான விளைவுகளையும் அளிக்கும். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப இவர்கள் நடப்பதால், அனைவரிடமும் சுலபமாக பழகுவார்கள்.