மறு வாக்கு எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளில் அசத்தல் வெற்றி: ஜனாதிபதியாகிறார் டிரம்ப்?

அமெரிக்காவில் கடந்த மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி ஹிலண்டனும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கூறி வந்த நிலையில், எதிர்பாரத விதமாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் அரங்கேறின.

இதற்கிடையில் அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களான விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியாவில் தேர்தலின் போது முறைகேடு நடந்திருப்பதாக கூறி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கு டிரம்ப் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் விஸ்கான்சின் மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை விட 23 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.

இதன் மூலம் விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பென்சில் வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து டிரப்ம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த மறுவாக்கு எண்ணிக்கை மூலம் நாம் தான் 131 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளோம், இதனால் ஜனநாயக கட்சியும், கிரீன் கட்சியும் சற்று ஓய்வு எடுக்க முடியும் என கூறியுள்ளார். மேலும் இந்த மறு வாக்கு எண்ணிக்கையின் மூலம் 0.06 சதவீதம் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.