அழகாக இருக்கும் சிலரின் பாதங்கள் கரடு முரடாய் வெடிப்புடன் இருக்கும். ஏனெனில் அவர்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்புகளில் பாதி அளவு கூட அவர்களின் பாதங்களுக்கு கொடுப்பதில்லை.
எவ்வளவு தான் ஒருவர் அழகாக இருந்தாலும் அவர்களின் கால்களில் இருக்கும் வெடிப்புகள் அவர்களின் அழகை பாதிக்கும் வகையில் இருக்கும்.
எனவே நமது கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறைவதற்கு, வெறும் 5 நிமிடம் தினமும் செலவழித்தால் போதுமானது.
தேவையான பொருட்கள்
- வெள்ளை சர்க்கரை – 1 கப்
- சமையல் சோடா- 2 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன்
- தேன் – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
பின் அதனுடன் 2 ஸ்பூன் சமையல் சோடா மற்றும் 2 ஸ்பூன் தேனை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை
நாம் குளிப்பதற்கு முன் தயார் செய்த இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி, கால் மற்றும் கைகளில் வட்ட வடிவில் 5 நிமிடம் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து சோப் எதுவும் போடாமல் குளிக்க வேண்டும்.
இதனால் நமது கால் மற்றும் கைகளின் சருமத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
எனவே தினமும் இவ்வாறு செய்தால் நம்முடைய பாதங்களில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் முடிகள் மற்றும் வெடிப்புகள் அகன்று, பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.