அம்மா உயிரோடுதான் இருக்கிறாரா? தமிழச்சியின் புதிய பரபரப்பு

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கத்தில் பல பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம் குறித்து இவர் தமிழக போலீசாருக்கு எதிராக பல பரபரப்பான கருத்துகளை கூறி வந்தார்.

அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.

தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்…

ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் “அம்மா உயிரோடுதான் இருக்கிறார்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்!” என்று தெரிவித்துள்ளார்.