தற்போது நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமை இல்லாமையால் ஒளி எழுப்பும் வாகனங்களில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பயணிப்பதற்கு அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதான மின் விளக்குகளை பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.
இவ்வாறு வீதியில் செல்வது, வெலே சுதாவா, கொலைக்கார சிராவா? ஆமி விமலா? என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஒரே நேரத்தில் 7, 8 வானங்கள் மின் விளக்குகளை பயன்படுத்தியவாறு வேகமாக பயணிக்கின்றது.
பொலிஸாருக்கு இவற்றில் செல்வது யார் என தெரியாது. அவர்களுக்கு வலதும் இல்லை, இடதும் இல்லை. வேக கட்டுப்பாடு இல்லை. ஒன்றும் இல்லை. அவ்வாறு நாட்டின் வீதிகளில் செல்வதற்கு யாருக்கும் காரணம் இல்லை. இவ்வாறு செல்வது அமைச்சர்களா? பிரதி அமைச்சர்களா? முதலமைச்சர்களா? முப்படை அதிகாரிகளா? அப்படி இல்லை என்றால் பாரிய குற்றவாளியான என யாருக்கும் தெரியாது.
இவ்வாறு செல்வது பிரபுக்கள் என்றால் அவர்கள் யார் என தெரிந்துக் கொள்ள வேண்டும். மின் விளக்குகளை பயன்படுத்திக் கொண்டு அவசியமற்ற வகையில் ஒளி எழுப்பிக் கொண்டு செல்லும் வாகனங்கள் தொடர்பில் உடனடியாக ஆராயந்து பார்க்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளேன்.. என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி குறிப்பிட்டிருந்தார்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைவதற்கு முன்னர் பிரபு ஒருவரின் வாகனம் பயணித்த புகைப்படங்கள் சில இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
காலி – திக்வெல்ல வீதியில் கடந்த 13ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு வீதியின் நடுவில் குறியிடப்பட்டுள்ள கோடுகள் குறித்து கருதாமல் வாகனத்தை முன் நோக்கி கொண்டு சென்றுள்ளதனை காண முடிந்துள்ளன.
ஜனாதிபதி கூறியதனை போன்று இங்கு பயணித்திருப்பது மோசடியாளரா, பிரபுவா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வாகனத்தில் பயணித்திருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என தகவல் வெளியாகியுள்ளது.