அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், இவரை இராஜாங்கச் செயலர் பதவிக்கு, நியமிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, எக்சன் மொபில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும், ரெக்ஸ் ரில்லர்சன், அரசியலில் முன் அனுபவமற்றவராவார்.
ரஷ்யாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் இவர், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார் என கூறப்படுகிறது.
புதிய இராஜாங்கச் செயலராக நியமிக்கப்படவுள்ள ரெக்ஸ் ரில்லர்சனுக்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிகார கைமாற்றத்தை சுமுகமாக மேற்கொள்வதற்கும், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையை உலகெங்கும் அவர் நடைமுறைப்படுத்தவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ரெக்ஸ் ரில்லர்சனுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.