ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக கேம்ஸ்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
முன்பெல்லாம் கேம்ஸ் விளையாட பிரத்தியேகமாக அப் டவுண்லோட் செய்து இன்ஸ்டொல் செய்ய வேண்டும். ஆனால் தற்போது எவ்வித கேம்ஸ் அப்ஸ்களயும் இன்ஸ்டொல் செய்யாமல் உங்கள் மொபைல் போனில் உள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் அப்-இல் இருந்தே கேம்ஸ் விளையாடலாம்.
இப்போதைக்கு 17 விதமான கேம்ஸ்களை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் நாளடைவில் அதிக அளவிலான கேம்ஸ்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும். இதை கையாண்டு விளையாடுவதும் மிக எளிது. நீங்கள் ஒரு கேம்ஸை விளையாட வேண்டும் என்று முடிவெடுத்தால் ஒன்லைனிலேயே உங்கள் போட்டியாளரை தேர்வு செய்யலாம்.
இப்போது கானா அப், தமிழ் உட்பட 9 மொழிகளை ஆதரிக்கிறது.! அவரிடம் இருந்து மெசேஜ் வந்துவிட்டால் நீங்கள் உடனே உங்கள் விளையாட்டை ஆரம்பித்து திறமையை காட்டலாம். Pac-Man, Galaga, மற்றும் Space Invaders உள்பட 17 வகை கேம்ஸ்கள் இதில் உள்ளது.