அடுத்த வருடம் இலங்கை வருகின்றார் மலேசிய பிரதமர்!

மலேசிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் 2017 மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மலேசியா சென்றார்.

அவருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அரசாங்க உயர்மட்ட தூதுக்குழுவினரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில்இ இன்று மலேசியாவில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளபோதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.