திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பனைமரக்குளம் (தல்கஸ்வெவ) பிரதேசத்தில் அரிய வகை வௌவால் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
இந்த வௌவால் சோளம் பயிர் செய்யப்பட்டிருந்த சேனையில் காணப்பட்டுள்ளது. கடந்த பௌர்ணமி தினத்தில் சிக்கிய இந்த வௌவால் பொன் நிறமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வௌவாலை பிடித்தவர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.