கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, சளி தொந்தரவு அதிகரித்ததன் காரணமாகவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 1ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, கடந்த 7ம் தேதி உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.