விஷால் நடித்துள்ள கத்திச் சண்டை படம் பொங்கலுக்கு அல்ல மாறாக முன்கூட்டியே டிசம்பர் 23ம் தேதி வெளியாக உள்ளது.
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளித் தள்ளிப் போட்டு ஒரு வழியாக பொங்கலுக்கு விஜய்யின் பைரவாவுடன் சேர்ந்து ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தை முன்கூட்டியே டிசம்பர் 23ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதை விஷால் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக சூர்யாவின் எஸ் 3 படம் டிசம்பர் 23ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேதியில் கத்திச் சண்டை ரிலீஸாகிறது.
எஸ் 3 படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று இன்னும் தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.