இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தமிழகத்தைச் சேர்ந்த அவர் 43 டெஸ்ட் போட்டியில் விளையாடி 243 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
250 விக்கெட்டை தொட இன்னும் அவருக்கு 3 விக்கெட் மட்டுமே தேவை. அவர் மேலும் 3 விக்கெட் கைப்பற்றினால் டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனை படைப்பார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி 250 விக்கெட்டுகளை 48 டெஸ்டில் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.
தற்போது சூப்பர் பார்மில் உள்ள அஸ்வின் சென்னை டெஸ்டில் மேலும் 3 விக்கெட் வீழ்த்தி அதிவேக 250 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைக்கிறார். அவர் இச்சாதனையை தனது சொந்த மண்ணில் படைப்பது சிறப்புக்குரியதாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான இத்தொடரில் அஸ்வின் இதுவரை 27 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். சென்னை டெஸ்டில் அஸ்வின் மேலும் 9 விக்கெட் வீழ்த்தினால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் (1972-ம் ஆண்டு) சந்திரசேகர் 35 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.