வடமாகாண சபை உறுப்பினர்கள் மக்கள் நல திட்டங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் 6 மில்லியன் நிதியை 10 மில்லியனாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி நடைபெற்ற வட மாகாண சபையின் 2017ம் ஆண் டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாத்தின்போது, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த ஒதுக்கீடான 6 மில்லியன் ரூபாவை 2017ம் ஆண்டும் வழங்குவதாக தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
மேலதிகமாக 1 மில்லியன் ரூபாய் நிதியை விசேட செயற்றிட்டம் ஒன்றுக்காக வழங்குவதாகவும், மொத்தமாக 7 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதாகவும் கூறினார்.
வடமாகாண மக்களின் தேவைகள் அதிகமாக உள்ள நிலையில் 6 மில்லியன் போதாது என கூறிய உறுப்பினர்கள் 7 மில்லியன் ரூபாய் நிதியை 10 மில்லியனாக அதிகரித்து வழங்கும் படி கேட்டிருந்தனர்.
இந்நிலையில் அன்றைய தினம் இணக்கம் காணப்படாத நிலையில் வரவுசெலவு திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டு இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு விடயம் தொடர்பான கூ ட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே 10 மில்லிய ன் ரூபாய் நிதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்பில் அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம், உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஆனோல்ட் மற்றும் பிரதம செயலாளர், பிரதி பிரதம செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.