இலங்கையருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

இலங்கையின் முதலீட்டாளரான ரியன்ஸி எட்வேட்ஸ், மோசடியான முறையில் அமெரிக்காவிலும் உலகத்தின் பல நாடுகளிலும் பணச்சலவையில் ஈடுபட்டு 50மில்லியன் டொலர்களை களவாடியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

அமெரிக்காவின் நீதித்துறை திணைக்களம் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தரப்படும் என்றுக்கூறி இந்த மோசடியை ரியன்ஸி மேற்கொண்டுள்ளார்.

தமது திட்டத்துக்கு அரசாங்கத்தின் பின்புலம் இருப்பதாக ரியன்ஸி கூறியிருந்தாலும் அது பொய்யானது என்று அமரிக்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2013 ஜூன் முதல் 2016 ஆகஸ்ட் வரையில் ரியன்ஸி எட்வேட்ஸ், மைக்கல் ஜேக்கப், ரூபி ஹேன்ட்லர்-ஜேக்கப், போன்றோர் இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று அமரிக்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

இந்தநிலையில் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

எனினும் இந்தக்குற்றச்சாட்டை ரியன்ஸி மறுத்துள்ளார்.