பரிகார காலம் :
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம் :
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.