பாட்ஷா படம் பார்த்தார் கருணாநிதி!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்ச பெற்று வருகிறார்.

கருணாநிதிக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்னர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை சற்று உடல்நிலை தேறிவந்த நிலையில் சிறிது நேரம் பாட்ஷா படம் பார்த்துள்ளார் கருணாநிதி. லேப்டாப்பில் சிறிது நேரம் பாட்ஷா படம் பார்த்தாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.