என்ன டேமேஜ் செய்றதே இந்த பத்திரிகைக்காரங்கதான்.. சீறிய வைகோ!

இலங்கை அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீடியாக்கள்தான் தன்னை, மீடியாக்கள் டேமேஜ் செய்வதாக ஆதங்கம் தெரிவித்தார்.

தன்னைப் பற்றி மீடியாக்கள் நெகட்டிவாகத்தான் சித்தரிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். கோ.சி.மணி மரணத்திற்கு அஞ்சலி செலுத்த போனபோது, அணு உலை மாநாட்டை தவிர்க்கவே நான் அங்கு சென்றதாக பத்திரிகையில் செய்தி வெளியானது, மோடி அரசை எதிர்க்க கூடாது என்பதற்காக நான் தவிர்த்துவிட்டதாக அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டதாக வைகோ ஆதங்கம் தெரிவித்தார்.

மேலும் அங்கிருந்த மீடியா நிருபர்களையும், கேமராமேன்களையும் வெளியேற கூறியுள்ளார். நியூஸ்18 தமிழ்நாடு சேனலில் இந்த செய்தி வெளியானது.