ஜனாதிபதி தேர்தலில் டிரம்பிற்கு உதவிய ரஷ்யா! ஒபாமா அதிரடி சபதம்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உதவியது தொடர்பாக ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சபதம் செய்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி உள்ளதாக சமீபத்தில் மத்திய உளவு முகமை சி.ஐ.ஏ. குற்றம் சாட்டியது.

எனினும், இதுபற்றி உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி ஜனவரி 20ம் திகதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிப்பெற உதவிய ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.

மேலும் அவர், இவ்விவகாரத்தில் புதினுக்கு என்னுடைய உணர்வு என்னவென்று தெரியும், ஏனென்றால் இவ்விவகாரம் தொடர்பாக புதினிடம் நேரடியாகவே நான் பேசிஉள்ளேன் என தெரிவித்துள்ளார்.