அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற வாலிபர் இன்னும் 4 மாதங்களில் வீடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் கடந்த யூன் மாதம் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இதன்போது, பிரித்தானியா நாட்டை சேர்ந்த Michael Sandford என்ற 20 வயது வாலிபரும் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், பிரச்சாரம் நடைபெற்று வந்தபோது திடீரென கூட்டத்தினர் மத்தியில் புகுந்த வாலிபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துள்ளார்.
ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட்ட பொலிஸார் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளதுடன் அவரை விசாரணை செய்தபோது டொனால்ட் டிரம்பை சுட்டுக் கொல்ல முயன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வாலிபருக்கு நீதிமன்றம் 366 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சிறைச்சாலையில் தனது மகனை நேற்று(14) சந்தித்த தாயார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சிறைக்காலம் முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கின்றன. இந்த தண்டைக்காலம் முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவார்.
சிறுவனாக இருந்தது முதல் தனது மகன் மன ரீதியான பிரச்சினைகளால் அவதியுற்று வந்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் நிகழ்ந்த இம்மோசமான சம்பவத்திற்கு பிறகு பிரித்தானியா நாட்டை விட்டு வெளியேற தன்னுடைய மகனுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தாயார் தெரிவித்துள்ளார்.