இன்றைய ராசி பலன் 17.12.2016

  • மேஷம்

    மேஷம்: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நிம்மதியான நாள்.

  • கடகம்

    கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

  • துலாம்

    துலாம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்
    கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்
    தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • மகரம்

    மகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.