சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே ஆங்கிலம் கற்றுக்கொண்ட 35 கைதிகள் நடந்த ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்துக்குத் தோற்றியதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
இவர்களுள் இரண்டு மரணதண்டனைக் கைதிகளும் உள்ளடங்குவதாகவும் சிறைகளில் உள்ள ஆங்கிலப் புலமை பெற்ற கைதிகள் சக கைதிகளுக்காக இலவசமாக நடத்தும் ஆங்கில வகுப்புகள் அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.