நல்லிணக்கம் குறித்து மலேஷிய பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கம்!!

மலேஷியாவுக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தேசிய அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார். அத்துடன் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமுக அபிவிருத்தி குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.