ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையோடு மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையையும் வலியுறுத்தி வருவதோடு, பல்வேறு நிர்பந்தங்களையும் உருவாக்கி வருகிறது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது முதல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பாராளுமன்றத்திலும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், பணமில்லா பரிவர்த்தனையை ஏழை மக்கள் மீது அரசு திணிக்கக் கூடாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கோவாவில் தேர்தல் பிராச்சாரம் ஒன்றில் இது குறித்து பேசிய ராகுல்காந்தி, “பணமில்லா பரிவர்த்தனைக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல. ஏழை மக்கள் மீது மத்திய அரசு இதனை திணிப்பதை விரும்பவில்லை. ரொக்கமில்லா பரிவர்த்தனையால் 5-6 சதவீதம் கூடுதலாக வரி செலுத்த வேண்டி உள்ளது” என்றார்.