சீனா, தைவான் விவகாரத்தில் சிந்தித்துச் செயல்படவேண்டும்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இவ்வாண்டின் இறுதிச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

பல்வேறு விவகாரங்களின் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

சீனாவுடனான அமெரிக்காவின் உறவே அதிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்றார் அவர்.

தைவான் மீதான சீனாவின் நிலைப்பாடு குறித்துத் திரு. டோனல்ட் டிரம்பின் நிர்வாகம் சிந்தித்துச் செயல்படவேண்டும்.

அதில் மாற்றம் ஏற்பட்டால், அதன் பின்விளைவுகள் அமெரிக்க-சீன உறவைப் பாதிக்கும் என்று திரு. ஒபாமா கூறினார்.

மற்ற விவகாரங்களைப்போல சீனா அதை எளிதாக எடுத்துக்கொள்ளாது.

தென் சீனக் கடல் விவகாரத்தில் பதற்றம் நிலவுகிறது.

அதைக் கையாள்வதுபோல் பெய்ச்சிங், “ஒரே-சீனா” கொள்கை குறித்த அணுகுமுறை மாற்றத்தைக் கையாளாது என்று அதிபர் ஒபாமா கூறினார்.