ஜேர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சிறுவன் ஒருவன் வெடிகுண்டு வைத்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Ludwigshafen நகரில் செயல்பட்டு வரும் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த சிறுவன் வெடிகுண்டை மறைத்து வத்த சில நாட்களுக்கு பின்னர் வேறொரு கருவியை அந்த வெடிகுண்டுடன் பொருத்த முயற்சித்தபோது பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட பொலிசார் குறித்த வெடிகுண்டை அப்புறப்படுத்தியதுடன் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய விசாரணை அதிகாரிகள், குறித்த சம்பவத்தில் ஐ.எஸ் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கருத்து கூற மறுத்துள்ளார்.
Ludwigshafen நகரில் பிறந்து வளர்ந்த குறித்த சிறுவன் ஈராக்கில் இருந்து ஜேர்மனியில் குடியேறியவர்கள் என தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனுக்கு 12 வயதே ஆவதால் அவன் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாத நிலை இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 26 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் வெடிகுண்டை வெடிக்க வைக்கும் கருவியானது செயலிழந்ததை அடுத்து வெடிகுண்டு வெடிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதிகள் திட்டமிட்டப்படி வெடிகுண்டு வெடித்திருந்தால் ஆள் அபாயம் அதிகமாக இருந்திருக்கும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டுமின்றி குறித்த சிறுவன் கடந்த கோடை காலத்தில் சிரியா சென்று வந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.