மார்கழி மாதம் பிறந்தவுடன் பெண்கள் வீட்டு வாசலை சுத்தமாக மெழுகி கோலமிடுவார்கள். பின்னர் அதில் சாணத்தை பிள்ளையாராக பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப்பூவை அழகு படவைப்பர். 30 நாட்களும் இவ்வாறு செய்தபின் அதைச் சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு வழிபடுவர்.
இதனைச் சிறு வீட்டு பொங்கல் என அழைப்பர். பின்னர் சேகரித்த சாண உருண்டைகளை நீர் நிலைகளில் சேர்ப்பர். இதற்கு முக்கிய கதை உண்டு. பாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருஷத்திர யுத்தம் மார்கழி மாதத்தில் தான் நடந்தது. பாண்டவர்கள் சேனைகள் தங்கியிருந்த வீடுகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக வியாசர் வீட்டுவாசலில் சாணம் இட்டு பூ வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாராம்.
அதை அடையாளத்தை கொண்டு போர் நடக்கும் சமயத்தில் பாண்டவர்கள் சேனைகளின் வீடுகளை கவுரவர்கள் தாக்காமல் இருப்பதற்காக கண்ணபிரான் பாதுகாப்பு அளித்தார். அன்று முதல் இந்தப்பழக்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.