மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரஜினி ரசிகர்கள் அஞ்சலி!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இது தமிழ்நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தற்போது அவரது நினைவிடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் 5000 பேர் இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் ஒருவர் கூறுகையில் ” நடிகர் சங்கம் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்திய அஞ்சலியில் தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ஜெயலலிதா குறித்து சில மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அதனால் அவரின் ரசிகர்களாகிய நாங்கள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினோம்” என்றார்.