விஜய்,சூர்யாவைத் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘பைரவா’ வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய், சூர்யாவைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி-2’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் பிரீ-புரொடக்ஷன் பணிகளில் லிங்குசாமி கவனம் செலுத்தி வருகிறார்.

முதல் பாகத்தில் விஷாலின் தந்தையாக நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் விஷாலின் தந்தையாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.